பக்கம்:துறைமுகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 56 கர்வத்தின் உச்சியில்நான் நிற்பேன் என்றான். கட்டழகின் உச்சியில்நான் நிற்பேன் என்றாள். பர்வதத்தின் உச்சியிலே ஏற வேண்டின் பயிற்சிமிகத் தேவையென்றான். ஆமாம் என்றாள். சர்வசித்தி பெறவரும்பும் துறவிக் கெல்லாம் தவயோகம் மிகத்தேவை. அதுபோல், காதல் நிர்வாகம் நாமிங்கு நடத்த வேண்டின் நிர்வாணம் இப்போது தேவை என்றான். அரசாட்சி கைக்குடைக்குச் சமான மாகும். அக்குடையைப் பிடிப்பதனால் கைக்குண் டாகும் சிரமங்கள் மிகவதிகம்; சுகமோ கொஞ்சம். தித்திக்கும் தெள்ளமுதே கிரேக்க நாட்டின் வரலாற்றைப் படித்தவளே உன்னைக் காண வராவிடிலே நித்திரையே வருவ தில்லை! உரையாட உறவாட உதவும் பெண்ணே! உற்றதுணை நீயென்றான். நாணி நின்றாள். அரிசியொரு புறத்தினிலும், நெருப்பும் நீரும் அடுப்புமொரு புறத்திலும் தனித்திருத்தல், உருசியுள்ள சோறாவதுண்டோ? என்றான். ஒருநாளும் ஆகாதே? என்றாள் மங்கை. சரியான புதுப்பொன்னே? பருவப் பெண்ணே! தழுவுகின்ற பூங்கொடியே இதன்ை நன்கு தெரிந்திருந்தும் நீயொதுங்கி நிற்க லாமோ? தேனிருந்தும் வழங்காமல் இருக்க லாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/55&oldid=924079" இலிருந்து மீள்விக்கப்பட்டது