பக்கம்:துறைமுகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 கவிஞர் சுரதா இதுவேண்டாம் அதுவேண்டாம் பெண்ணே உன்றன் எட்டுச்சாண் அங்கத்தில் தங்கி யுள்ள சதைஇளநீர் தானெக்கு வேண்டும். உன்றன் சத்தான முத்தந்தான் எனக்கு வேண்டும். முதல்முத்தம் யார்கொடுத்தால் என்ன? நீயே முதலிலெனை முத்தமிடு பின்னர் நானும் பதிப்புரையைத் தொடங்குகின்றேன். கீழே யுள்ள படித்துறையில் அதற்குப்பின் இறங்கு கின்றேன். வெளிநாட்டுத் தாமரையே வாவா என்றான். விழிவலையை வீசுபவள் அவனை நோக்கி, வெளிநாட்டுத் தாமரையில் கிரேக்க வண்டு விழலாமோ சொல்லுங்கள்? என்று கேட்டாள். தெளிவாகப் பேசுகின்றாய் பெண்ணே என்றான். சிங்காரி மெதுவாகச் சிரித்துக் கொண்டே, அளவாக உண்டால்தான் செரிக்கும் என்றாள். ஆகட்டும் பார்க்கின்றேன் என்ற ணைத்தான். BGDCગર

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/56&oldid=924080" இலிருந்து மீள்விக்கப்பட்டது