பக்கம்:துறைமுகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 5. தித்தித்ததா இல்லையா? அன்றொருநாள் எனைநீங்கள் என்றாள். ஒகோ அதைத்தானே சொல்லுகின்றாய் என்றான். நேரில் நின்றொருநாள் எனைநீங்கள் என்றாள். அந்த நிகழ்ச்சியின்னும் முடியவில்லை என்றான். ஆரூர் சென்றொருநாள் எனைநீங்கள் என்றாள். அந்தத் தேதியென்ன, மாதமென்ன? என்று கேட்டான். ஒன்றிரண்டு போதுமென்றாள். அதற்கு மேலே ஒன்றிரண்டு நீகொடுத்தால் போது மென்றான். எவள்சிரித்தால் அரும்புகளைப் பார்க்க லாமோ, எவள்நடந்தால் அன்னத்தைப் பார்க்க லாமோ, அவள்சிரித்தாள். அவள்மெதுவாய் நடந்து வந்தாள். ஆங்கவனும் பின்தொடர்ந்து நடந்து வந்தான். சிவந்தவளே! நேற்றிரவு கொடுத்த முத்தம் தித்தித்த தா?இல்லை யாசொல்? நீஏன் கவிழ்ந்தபடி முதலிரவில் இருந்தாய்? என்றான். காதலுக்கு நாகரிகம் அதுதான்! என்றாள். 26DQR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/57&oldid=924081" இலிருந்து மீள்விக்கப்பட்டது