பக்கம்:துறைமுகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா ஆற்றோரம் படைகிழிக்கும் பேராற்றல் பெற்றி ருந்த பகவனொரு சிற்றரசன். மதத்தால் புத்தன். வடகிழக்கே அவன்நாடாம் சிறிய நாடாம்: மாமலைகள் படுத்திருக்கும் குறிஞ்சி நாடாம். அடைமழைக்கும், வெயிலுக்கும். விவாதத் திற்கும் அஞ்சாத புத்தமதப் பெரியோர் நால்வர், குடிசெழிக்கச் செய்தோனைக் காண வந்தார். குறையேதும் உமக்குண்டோ? என்றான் மன்னன். மயில்விழித்து விளையாடிப் பொழுது போக்கும் மலைச்சாரல் மன்னவனே! தனித்தி யங்கும் உயிரெழுத்தாய் நீயிருந்து வருவதாலே ஒருகுறையும் எமக்கில்லை. நேற்று நாங்கள், வெயில்விழித்த வேளையிலோர் செடியைக் கண்டோம். விதைகண்டோம் அவ்விதையில் எண்ணைய் கண்டோம். இயல்வித்தால் காவியங்கள் விழிக்கும் காய்ந்த எள்விழித்தால் அதில்விழிக்கும் எண்ணெய் வெள்ளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/59&oldid=924083" இலிருந்து மீள்விக்கப்பட்டது