பக்கம்:துறைமுகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 62 இலுப்பையிலும் நெய்யுண்டு, செடியில் தோன்றும் எள்ளினிலும் நெய்யுண்டு வேந்தே அந்த இலுப்பைதரும் நெய்யைவிட நாங்கள் கண்ட எள்ளினது நறுநெய்யே சிறந்த தாகும். பலர்க்கிதனால் பயனுண்டோ என்று கேட்டால் பயனுண்டு. நன்மையுண்டு. நல்லோர் போல நலஞ்செய்யக் கூடியதென் றறிந்தே நாங்கள் நல்லெண்ணெய் என்றிதனை அழைக்க லானோம். ஆத்திரத்தின் உச்சியிலே நிமிர்ந்து நின்றால் அழிவுவரும் என்றுணர்த்தும் வேந்தே இந்தப் பாத்திரத்தில் குடியிருக்கும் எண்ணெய், இங்கே பலர்தலையில் குடியேறு மாயின், அன்னார் நேத்திரத்தின் ஒளிபெருகும் மேனி மின்னும், நிச்சயமாய் உடற்சூடும் தணியும், மேலும் கூத்தடிக்கும் கபவாத பித்த மெல்லாம் குளிர்நாளில் பாதிரிப்பூப் போல வாடும். சனியன்றும், புதனன்றும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வருவோர்க்கு மேலும் மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும் இதனை நாங்கள் நெடுங்காலம் ஆராய்ந்தே சொல்லு கின்றோம். அனல்வட்டம் எனுங்கதிரோன் உதிக்கு முன்னர், ஆறுகுளம் கேணியில்நீ ராடி னாலும், வினைவேந்தே நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டால் வெந்நீரில் தான்குளிக்க வேண்டு மென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/60&oldid=924085" இலிருந்து மீள்விக்கப்பட்டது