பக்கம்:துறைமுகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கவிஞர் சுரதா கோடைபழகும் கரமுடையான் அதனைக் கேட்டுக் குதுகலித்தான் பிறர்க்கதனை எடுத்து ரைத்தான் படைபழகும் வீரர்களும் அவனும் பச்சைப் பசலைநிலாச் சிறுவர்களும் பிறரும் முல்லைக் கொடிபழகும் கோதையரும் எண்ணெய் தேய்த்துக் கொண்டெழுந்து நதிநீரில் குளித்தெ ழுந்தார். அடிபழகும் அன்னத்தைப் போன்ற பெண்கள் ஆற்றோரம் எண்ணெய்விளக் கேற்றி வைத்தார். தைப்பனியைப் போலுள்ளம் குளிர்ந்த மன்னன் தாமரையைப் போல்மலர்ந்தோர் தம்மை நோக்கி: ஐப்பசியில், சதுர்த்தசியாம் திதியில், மெச்சும் அறிவுடையோர் எள்கண்டு பிடித்த தாலே, நெய்ப்பசையின் பயனறிந்தோம் எண்ணெய் தேய்த்து நீராடி ஆனந்தக் களிப்பும் கண்டோம். பொய்ப்பசியை வளர்க்காதீர் வையம் போற்றும் புகழ்ப்பசியை வளர்த்திடுவீர் அதுதான் தேவை. பனித்திருநாள் நமக்குண்டு, வேங்கை வீரர் படைத்திருநாள் நம்நாட்டில் நடப்ப துண்டு. கனித்திருநாள் நாமறிவோம். போதி புத்தர் கதைத்திருநாள் நமக்கெல்லாம் பெருநாளாகும். மனைத்திருநாள் ஆகட்டும் இனிமேல் இந்நாள், வரந்தியில் மிதக்கட்டும் எண்ணெய்த் தேமல் தனித்திருநாள் புதுத்திருநாள் இந்நாள் எள்ளின் சரித்திரந்தான் நல்லெண்ணெய்த் திருநாள் என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/61&oldid=924086" இலிருந்து மீள்விக்கப்பட்டது