பக்கம்:துறைமுகம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா வென்றவனை வென்றவன் கிழக்கிருந்து மேற்குவரை சென்று, மீண்டும் கீழ்த்திசையில் உதித்தெழுந்தான் கதிரோன். தீரா வழக்கிருந்து வருகின்ற உலகம், வெய்யில் வட்டத்தால் விளங்கிற்று. வந்தான் தித்தன். மழைக்கிருந்து வருகின்ற பெருமை பெற்ற மாமன்னன் அமர்ந்தவுடன் அவையை நோக்கி, அழுக்கிருந்து வருகின்ற நிலவை, நீங்கள் ஆதரிக்கச் சொன்னால்யான் ஒப்ப மாட்டேன். சோழமென்றால் சூரியனாம்; அதனா லன்றோ சூரியன்போல் சிறந்தோனைச் சோழன் என்றார். ஆழமென்று கண்டறிந்த கார ணத்தால் அலைகடலை ஆழியென்றார். உங்கட் கெல்லாம் வேழமென்றால் தெரியாதா? பெண்க ளோடு விளையாடும் என்மகனா வேழம்? சான்றோர். ஈழமென்றால் கள்ளென்பர் செம்பொன் என்பர் என்மகனைப் பொன்னென்றா சொல்லு கின்றீர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/63&oldid=924088" இலிருந்து மீள்விக்கப்பட்டது