பக்கம்:துறைமுகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 66 மழைத்துளிபோல் பயன்படுவான் என்றே எண்ணி மகிழ்ச்சியோடு யானிருந்தேன். அவனோ, நம்தாய் மொழிக்குமுதல் வாராத எழுத்தைப் போலும், மூடிவைத்த புண்போலும் ஆகி விட்டான். வழித்தெறியும் வியர்வையவன். மயங்கும் அந்தி மாலையிலும் காலையிலும், பூத்த பூவின் குழிக்குள்விழும் வெறிவண்டு போன்றோன் ஆவான். குடைநிழலில் அதன்பள்ளம் தெரிவதுண்டோ? கழுத்துக்கோர் அணிகலன்போல் சிறந்த தான கட்டளையாம் கலித்துறையின் அடிகள் தோறும், எழுத்துக்கள் எண்ணுகின்றார் இளைஞர். ஆனால் என்மகனோ, எத்தனைபேர் இங்கு வாழைப் பழத்துக்கு நிகரான பெண்டிர் என்று பார்வையினால் எண்ணுகின்றான். வேங்கை போன்று விழித்துப்பார் என்றுரைத்தால், அவனோ பெண்மான் விழிப்பதுபோல் விழிக்கின்றான், மருளு கின்றான். நாணிக்கண் புதைப்பதெல்லாம் பெண்கள் காட்டும் நாகரிகம்! அவர்கட்கே உரிய செய்கை, ஆணிப்பொன் மாதரைப்போல் நாணம் காட்டல் ஆண்பிள்ளைக் கழகாமோ? ஒவ்வோர் நாளும், ஊணுக்கும் உப்பமைந்த காமத் திற்கும், ஓடுகின்றான். அவனினிமேல் திருந்த மாட்டான். காணிக்கை தருவோரே! பசுப்பால் கொண்டு கழுவிடினும் கரித்துண்டேர் வெண்மை யாகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/64&oldid=924089" இலிருந்து மீள்விக்கப்பட்டது