பக்கம்:துறைமுகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கவிஞர் சுரதா முள்ளிருக்கும் கள்ளியெலாம் பாலை மண்ணில் முளைத்திடலாம். மென்பாலாம் மருதம் தன்னில் கள்ளிருக்கும் தாமரைக்கே இடமுண் டன்றிக் கற்றாழை வேரூன்ற இடமே இல்லை. புள்ளிருக்கும் நகரத்தில், பொன்னி யாற்றின் புனல்பாயும் உறையூரில், வணிகர்க் காக எள்ளிருக்க இடங்கொடுத்தேன். என்றன் மைந்தன் எள்ளிநகை யாடஇடம் கொடுத்து விட்டான். வினைவிருப்பம் கொண்டவர்கள் உதட்டின் எச்சில் வெறிகொண்டு, காமுகர்போல் ஒவ்வோர் நாளும் மனைவிருப்பம் கொள்வதில்லை. கொள்வா ராயின் வான்புகழைப் பெறமாட்டார். ஒருவன் வாழ்வில், தனிவிருப்பம் எத்தனையோ உண்டென் றாலும், தமிழ்மீதும், தமிழகத்தின் மீதும், யாரும் நனிவிருப்பம் வைத்திடுதல் வேண்டும். இந்த நல்விருப்பம் என்மைந்தன் இடத்தில் உண்டோ? வெள்ளிவிழா வெற்றிவிழா ஆற்றின் வெள்ளம் வீங்கிவரின் அதற்குவிழா ஆண்டு தோறும் உள்ளிவிழா நடத்தும்யான், தமிழுக் கிங்கோர் உலகவிழா நடத்துதற்கு முயலு கின்றேன். துள்ளியெழாப் ുഖമുണഥ வந்தால், కLQar@ఉ5 GrL5da@ు. ఆ3FILGuఉ3rd: பள்ளிவிழா நடத்துதற்கு விரும்பு கின்றான். படுக்கையறைப் பக்கம்தான் திரும்பு கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/65&oldid=924090" இலிருந்து மீள்விக்கப்பட்டது