பக்கம்:துறைமுகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 68 நிறத்தாலே கறுத்தமகன், வெறுக்கத் தக்க நிகழ்ச்சியினால் நூறுமுறை கறுத்து விட்டான். அறத்தாலே திருந்துதற்கும் முயன்றேன். மேலும் அன்பாலே திருத்துதற்கும் முயன்று பார்த்தேன். முறித்தாலும் முறிவதுண்டோ வான்வில்? என்றன் முயற்சியிலே யான்தோற்றேன். அவனே வென்றான். பொறுத்தேன்யான். இனிபொறுக்க மாட்டேன். பாவ புண்ணியமெல் லாமினிமேல் பார்க்க மாட்டேன். மெய்நீக்கி எழுத்தெண்ண வேண்டு மென்னும் விதியுண்டு செய்யுளுக்கு செயலில் தூங்கும் பொய்நீக்கி மெய்காண வேண்டும். நீரின் ചോജ് பாசியைநாம் விலக்க வேண்டும். நெய்நீக்கிச் சோறுண்ணாச் சோழ நாட்டில் நீதிக்கே முதலிடமாம்! எனவே இங்கே, மைநீக்கும் கைம்பெண்டிர் போலே, அந்த மடப்பயலை விரட்டுவதே விவேக மாகும். புண்புணரும் வேலோடு கட்டி' என்பான் போராடக் காத்திருக்கும் வேளை தன்னில், கண்புணரும் சோலைதனில் பெண்டி ரோடு காதலுரை யாடுகின்றான் கடையன். இந்த விண்புணரும் வையத்தில், பழிக்கத் தக்க விணன்வந்து பிறந்தானே என்றுகூறி, மண்புணரும் மலைகளுக்கும் அப்பால் உள்ள மணல்வெளிக்குத் தன்மகனைத் துரத்த லானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/66&oldid=924091" இலிருந்து மீள்விக்கப்பட்டது