பக்கம்:துறைமுகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 70 இடப்பெயரை என்பெயரால் கெடுத்தேன். பெற்றோர் இட்டபெயர் மட்டமென மாற்றிக் கொண்டேன். குடிப்பெயரை மதுப்பெயர்தான் என்றே எண்ணிக் குடிகார னாகிவிட்டேன். கற்பு மங்கைப் படப்பெயரின் பக்கத்தில், தழுவும் காமப் பரத்தையரின் முகவரியை எழுதி வைத்தேன். சடப்பெயரைத் தாங்குகின்றேன்.தெளிவாய்ச் சொன்னால் சவத்திற்குச் சமமாக இருக்கின் றேன்யான். இலர்பலராய் ஆவதற்கும் அறிவின் ஆற்றல் இல்லாமல் பலரிங்கே இருப்ப தற்கும்; சிலர்சிலர்போல் வாழ்நாளில் முயற்சி ஏதும் செய்யாமை காரணமாம். தனியே இங்கு மலர்மலராய் இருப்பவற்றைத் தொடுத்தா லன்றி மாலையெனும் பெயரதற்கு வருவ தில்லை. சிலர்சிலரின் வெற்றிக்கோ ஊக்கம் வித்தாம். சிலர்சிலரின் தோல்விக்கோ துக்கம் வித்தாம். நான்பிறந்த நாட்டிலொரு கோழை யாக, நற்றமிழைச் சுவைத்தறியா மூட னாக, மான்பிறந்த கானகத்தில் உடைவேல்' என்னும் மரத்தினது மிகச்சிறிய இலைபோ லாகத் தேன்பிறந்த தாமரையின் தண்டில் உள்ள சிறியதொரு முள்ளாக இருக்கின் றேன்யான். ஏன்பிறந்தேன் சான்றோர்கள் பிறந்த நாட்டில்? எச்சிலிலை பயன்படுமோ மீண்டும் வீட்டில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/68&oldid=924093" இலிருந்து மீள்விக்கப்பட்டது