பக்கம்:துறைமுகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கவிஞர் சுரதா தூங்கெயிலை எறிந்தவனாம் என்தாய் மாமன் தொடித்தோட்செம் பியனென்னும் மன்ன னெங்கே? வேங்கைமலர் மேலுதிரச் சிறுகண் யானை விழிமயங்கி உறங்குதல்போல், பெண்க ளோடு தூங்கியவன் நானெங்கே? இனியும் என்றன் துயரத்தைப் போக்காமல், புகழ்சேர்க் காமல், வீங்கியமண் மண்டலத்தில் வாழ மாட்டேன். வெறும்மூச்சு விட்டுக்கொண் டிருக்க மாட்டேன். மலையாக நானிருக்க வேண்டும்; ஆனால் மணலாக இருக்கின்றேன். கடலில் தோன்றும் அலையாக நானிருக்க வேண்டும்; ஆனால் அதன்துரையாய் இருக்கின்றேன் பாயும் வேங்கைத் தலையாக நானிருக்க வேண்டும். ஈயின் தலையாக இருக்கின்றேன். இனியென் வாழ்வில் எலியாக யானிருக்கப் போவ தில்லை என்றெண்ணிப் போர்ப்பயிற்சி பெற்று வந்தான். கத்தியிலே வீரத்தை வைத்து வந்தான். கல்வியிலே நேரத்தை வைத்து வந்தான். பத்தடுக்கு மாளிகையில் தந்தை வேற்றுர்ப் பாசறையில் மீசைமகன் ஒவ்வோர் நாளும் நித்திரையே அவன்கண்ட ஓய்வாம் வீர நிகழ்ச்சிகளே அன்றாடப் பொழுது போக்காம்! முத்துரில் போரிட்டான் புகழைத் தொட்டான். முன்னேறி முன்னேறிக் கொண்டி ருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/69&oldid=924094" இலிருந்து மீள்விக்கப்பட்டது