பக்கம்:துறைமுகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 72 சூலத்தைக் கைக்கோலாய்க் கொண்டு, வீரச் சுவைபார்க்கும் பகைவர்களே கேளிர் இந்த ஞாலத்தில் எனைவெல்வோர் எவரு மில்லை. நமன்வந்தே எதிர்த்தாலும் அவனை, நீரில் நீலத்தைக் கரைப்பதுபோல் கரைப்பேன் என்றும் நெருப்புக்குத் தண்ணீரா சாம்ப லாகும்? மூலத்தின் முன்னுரையே நான்தான் என்றே முழக்கமிட்டான் அந்நாளில் ஆமூர் மல்லன். மண்டூகத் தவளையைப்போல் கத்தும் ஆமூர் மல்லனையான் வெல்லுகின்ற வரையில் இங்கே, உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கும் உயர்நெல்லிக் கனிதரினும் தின்ன மாட்டேன். பண்டோர்நாள் மறைந்ததமிழ் நூல்கள் மீண்டும் படிப்பதற்குக் கிடைத்தாலும் படிக்க மாட்டேன். கண்டாரை மயக்கிவரும் கொல்லிப் பாவை கண்ணெதிரே வந்தாலும் மயங்க மாட்டேன். என்றெழுந்தான் தித்தன்மகன். மறுநாட் காலை இளம்பொழுதில் ஆமூர்க்கு வந்து சேர்ந்தான். நின்றெழுந்து வெப்பத்தைக் கொப்பு ரிக்கும் நெருப்புக்கண் மாமல்லன் அப்போ தாங்கே, குன்றெழுந்து வருவதுபோல் எழுந்து வந்தான். கூட்டமங்கே கூடிற்று. மற்போர் செய்தார். ஒன்றுபடா உள்ளங்கள்! இரட்டை வீரம்! ஒன்றையொன்று வெல்லுதற்கு முயன்ற தாங்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/70&oldid=924096" இலிருந்து மீள்விக்கப்பட்டது