பக்கம்:துறைமுகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கவிஞர் சுரதா முறையாகப் போர்புரிந்தான் இளைஞன். சாவின் முனையேறிக் கொண்டிருந்தான் ஆமூர் மல்லன் பிறைவீரன் அன்னவனை விரைவில் வீழ்த்திப் பிணமாக்கி விட்டெறிந்தான் ஆங்கோர் பக்கம் உறையூரான் வெற்றிபெற்றான் என்னும் செய்தி ஒர்நொடியில் பரவிற்றுத் தமிழ்நா டெங்கும். குறைகூறித் துரத்திவிட்ட வேந்தன் கேட்டுக் குதுகலித்தான் கூனலங்கே நிமிர்ந்த தென்றான். வற்றாத காவிரியே என்றன் மைந்தன் மாவீர னாகிவிட்டான் என்னைப் போலே! சற்றேநில் செங்கதிரே பெருநற் கிள்ளி சான்றோனாய் விளங்குகின்றான் உன்னைப் போலே உற்றாரே உறவினரே! துரத்தப் பட்டோன் உலகுபுகழ் பெற்றுவிட்டான் எழுத்தும் எண்ணும் கற்றோரே! சாத்தந்தை யாரே! என்றன் கண்மணியை நான்காண வேண்டு மென்றான். தூண்டுபுகழ் பெற்றோனைக் காண வேண்டித் துடிதுடித்தோன் ஆமூரில் அவனைக் கண்டான். ஆண்டுபல வாகஉனைப் பிரிந்தி ருந்தேன். அடிக்கடிநான் உன்நினைவால் ஒடிந்து வந்தேன். மீண்டும்நான் உனைப்பெற்றேன் மகனே! நீயுன் வீரத்தால் கோப்பெருநற் கிள்ளி என்னும் நீண்டபெயர் தனைப்புவியில் நிலைக்கச் செய்தாய்! நெருங்காத நெஞ்சத்தை நெருங்க வைத்தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/71&oldid=924097" இலிருந்து மீள்விக்கப்பட்டது