பக்கம்:துறைமுகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 74 காமமெனும் சேற்றில்நீ வீழ்ந்த தாலே கண்டித்தேன். தண்டித்தேன். நாக்கில் லாத ஊமைமணி போன்றிருந்தாய் என்பதாலே உபயோகப் படமாட்டாய் எனநி னைத்தேன். தேமதுரத் தமிழ்நாட்டில் இன்றே வெற்றிச் சிங்கமெனத் திகழ்கின்றாய். இனிமேல் உன்னைப் பூமிமகள் சுமப்பதிலே பெருமை கொள்வாள்! புகழ்கூட உன்மீது பொறாமை கொள்ளும்! என்றிட்டான் அவன்தந்தை அவனை நோக்கி, ஏனப்பா வருந்துகின்றீர்? வருந்தா தீர்கள்! அன்றைக்கே நான்திருந்தி இருந்தால், இந்த அவலநிலைக் காளாகி இருக்க மாட்டேன். இன்றன்றோ நான்வெற்றி வீர னானேன்! எனக்கூறி அடிபெயர்த்தான். உடனே மன்னன் என்றைக்கும் நினதுடிகழ் நிலைத்தி ருக்கும் என்மகனே! என்றவனைத் தழுவிக் கொண்டான். 3ox &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/72&oldid=924098" இலிருந்து மீள்விக்கப்பட்டது