பக்கம்:துறைமுகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 78 மன்னவன் பேரவையில் -கவி மாலை தொடுத்தவனாம்: கன்னியர் மார்பினிலே தினம் கண்ணைப் பதித்தவனாம். தென்னவன் அன்னவனாம் -சதைச் சேற்றில் விழுந்தவனாம்; அன்னவன் பொற்கட்டியாம் அவன் அண்ணா மலைரெட்டியாம். வாசல் நிலவுகளாம்- நய வஞ்சக வஞ்சியரின் ஓசை உதடுகளில்- அவன் ஒத்திகை பார்த்துவந்தான். ஆசை அரங்கத்திலே எழில் அங்கச் சுரங்கத்திலே பூசை புரிவதுதான் -பெரும் புண்ணியம் என்றிருந்தான். யாப்பு முறையறிந்தோன் அரை யாப்பெனும் நோய்வழக்கின் தீர்ப்பில் தளர்ந்துவிட்டான்- உடல் தேய்ந்து மெலிந்துவிட்டான்! காப்புக் கவியரசன்- நெடுங் காலம் உயிர்வாழும் வாய்ப்பை இழந்துவிட்டான் பிணி வந்து மடிந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/75&oldid=924101" இலிருந்து மீள்விக்கப்பட்டது