பக்கம்:துறைமுகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

கவிஞர் சுரதா


{{left_margin|3em|

அள்ளும் அழகுடையோன்- அவன்
அங்கம் அழிந்திடினும்
தெள்ளு தமிழ்க்குதவும்- அவன்
சிந்துகள் வாழ்ந்திருக்கும்!
கொள்ளி அணைவதுண்டு- நிறம்
கொண்ட மயிலிறகின்
புள்ளி அழிவதுண்டோ? -குளிர்
பூம்புனல் வெள்ளத்தினால்.
மண்ணில் நெடுங்காலம் -அந்த
மாகவி வாழ்ந்திருந்தால்
பண்ணைப் பயிர்போலே -சந்தப்
பாடல் வளர்த்திருப்பான்.
கண்ணுக் கினியகவி இன்ப
காவியம் தந்திருப்பான்.
வண்ணக் குருத்தோலை- கத்தி
வாய்ப்பட் டழிந்ததுவே.
கழுகு மலைவளத்தைக் -கதிர்
காட்டும் தினைப்புனத்தை
ஒழுகும் அருவியினை -எழில்
ஓவியக் காட்சியினைப்
பழகும் தமிழ்மொழியில் –அவன்
பாடி இருப்பதுபோல்
அழகு நயத்தோடு- பிறர்
ஆக்கல் எளிதல்லவே!
XXX

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/76&oldid=1441273" இலிருந்து மீள்விக்கப்பட்டது