பக்கம்:துறைமுகம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 கவிஞர் சுரதா காட்டுக்கு முன்கா லத்தில் கமண்டல முனிவர் தேவை ஏட்டுக்குத் தேவை என்ன? எழுத்தாணி. ஆனால் இன்றோ காட்டுக்குத் தேவை, நல்ல காவலே யாகும். பாடும் பாட்டுக்குத் தாளம் தேவை. பணத்திற்குத் திட்டம் தேவை. எனவேதான் புதிய சட்டம் இயற்றினோம். பொருளாதாரத் தனிவேதம் எழுதா விட்டால் தளராதோ நமது நாடு? கனிபோதும் அணிலுக் கெல்லாம்; கயல்போதும் கொக்குக் கெல்லாம். மனம்போது மென்ப தில்லை என்பதால் வகுத்தோம் சட்டம். என்றுநம் நேரு சொன்னார். இந்திய நாட்டு மக்கள் முன்னேற வேண்டு மென்று முழுமூச்சாய்ப் பாடு பட்டார். தென்மொழித் தமிழ்போல் வீசும் தென்றல்போல் சிறந்த நேரு, நன்மையின் தூதர் பேச்சு நாயகர் நாட்டின் தீபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/84&oldid=924111" இலிருந்து மீள்விக்கப்பட்டது