பக்கம்:துறைமுகம்.pdf/85

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

துறைமுகம்

88


நாகரி கத்தின்வ ரம்பனார்;

நாலுதி சைக்கும்வ ரம்பானார்;

ஈகைய ளிப்பதில் கண்ணானார்;

எல்லைவ குப்பதில் கண்ணானார்;

பாகமெ னெச்சம நேரானார்;

பண்பில்ப ழுத்தவர் நேரானார்;

தாகந்த விர்ப்பத்தில் நீரானார்;

தம்முடல் வெந்தவர் நீறானார்!


பாரினில் மேருவும் இன்றில்லை;

பஃறுளி யாறும் இன்றில்லை;

தாருவில் கற்பகம் இன்றில்லை;

சகோட யாழும் இன்றில்லை;

கோரிய செந்தமிழ்க் காப்பியமாம்

குண்டல கேசியும் இன்றில்லை;

ஓரியும் பாரியும் இன்றில்லை;

உத்தமர் நேருவும் இன்றில்லை!







13-11-1976 -ல், சென்னை வானொலியில் பாடிய கவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/85&oldid=1447518" இலிருந்து மீள்விக்கப்பட்டது