பக்கம்:துறைமுகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 94 அல்லிமலர் போன்றவளாம் அழகுப் பெண்ணை ஆசையொடு புத்தகத்தில் ஆட விட்டும். கல்மலையின் மெல்லியமே லாடை போன்று காட்சிதரும் அருவியொன்றை ஓட விட்டும்: மல்லிகையைப் பந்தலிலே படர விட்டும்; மடலேறும் வண்டுகளைப் பாட விட்டும்; நெல்விளையும் தகட்டுர்வாழ் கவிஞர், செய்யுள் நிதிநமக்குப் புதிதாக வழங்கி யுள்ளார். வனந்தெரிந்த இடத்தில்போய் மேயும் மானை 'வற்கலையே' என்றழைக்க வேண்டின் சொல்லின் இனந்தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெய்யோன் இழைக்கும்நாள்' என்றெழுத நுட்பம் வேண்டும். 'சினந்தணிந்த செங்கதிரோன் என்று பாடத் தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும். மனந்திறந்து சொல்லுகிறேன், சங்க நூலின் வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு. விலைமோரில் கடைவதற்கு வெண்ணெய் ஏது? வெறும்பாட்டில் சுவையேது? வண்ணப் பச்சை இலைமாலை மணந்தருமோ? சொல்வீர்? என்றே எழில்முதல்வன் கேட்கின்றார். நானும் கேட்பேன். கலையாக்கம் கருத்தாழ மெல்லாம், போலிக் கவிதைகளில் குடியிருக்க வருவ தில்லை. பலர்போற்றும் புலமையிலான் தொடுக்கும் பாடல் பகுதியைப்போல் நிலைத்திருக்கப் போவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/90&oldid=924118" இலிருந்து மீள்விக்கப்பட்டது