பக்கம்:துறைமுகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 96 திருமதி சிற்றம்பலம் அரியபல கட்டுரைகள் ஏடுகளின் அகலத்தை அளந்த துண்டு: கருவிமழை போற்சிறந்த காவியங்கள் எழுந்தவொரு கால முண்டு; பருவநிலை மாறுதல்போல் சிந்தனையில் புதுமைபல படர்ந்த தாலே நுரைமணிகள் ஏந்திவரும் சிற்றருவிச் சிறுகதைகள் நுழைதல் கண்டோம். ஏட்டில்நடை பெறுங்கவிதை கட்டுரைகள், சிறுகதைகள் எல்லாம்; தீயின் சூட்டில்நடை பெறும்சமையல் பக்குவத்தைப் போன்றதுதான், சுருங்கச் சொன்னால், நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும் சிறுகதையாம் நல்லோர் செய்த பாட்டுநடை தேனமுதாம்! உரைநடையே பொதுமக்கள் பசிக்குச் சோறாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/92&oldid=924120" இலிருந்து மீள்விக்கப்பட்டது