பக்கம்:துறைமுகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கவிஞர் சுரதா அதிமதுர காவியத்தால் அத்தனைபே ரையும்தூக்கி அடித்தான் கம்பன்: இதுவரையில் செயங்கொண்டான் பரணியினை வெல்லும்நூல் எழுந்த தில்லை! கதைவழியில் புதுவழியைத் தமிழர்க்குக் காட்டியவர் கல்கி என்றால்: புதியநடை புதியவழி, சிறுகதையில் புகுத்தியவர் புதுமைப் பித்தன். முத்தனுக்குப் பின்முனியன் உழுதுபயிர் செய்வதுபோல் முதிர்ந்த கல்விப் பித்தனுக்குப் பின்வந்து சிறுகதைகள் பயிர்செய்யும் பெரியோன் தந்த சித்திரப்பெண் திருமதிசிற் றம்பல த்தை நான்தொட்டுச் சிலிர்த்தேன்! நல்ல புத்தகத்தை ஏழெட்டு முறைபடிப்பேன். அவ்வாறே புரட்டிப் பார்த்தேன். திறன்தோய்ந்த சிந்தனையால், தேன்தோய்ந்த தலைப்புகளால், செழித்த சொல்லால், சிறந்தோங்கும் சிறுகதைகள் பலஎழுதிப் பரிசுபெற்ற திறமை யாளர் அறந்தாங்கிப் பூவைநகர் எழுத்தாளர் ஆறுமுகம் அவர்கள் வேங்கை மறம்தாங்கும் வீரர்விழி போற்சிறந்த சிறுகதைகள் வழங்கி யுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/93&oldid=924121" இலிருந்து மீள்விக்கப்பட்டது