பக்கம்:துறைமுகம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 100 கட்டடம் கட்டுபவன் -ஒரு கல்லொடு மற்றொரு கல்லினைச் சேர்த்ததை ஒட்டிடும் தன்மையைப்போல் பதம் ஒட்டுவ தாலுரு வாகும் தமிழினில் பட்டமும் பெற்றவராம் இவர் பாட்டுப் படையல்நம் நாட்டுத் துறைமுகப் பட்டினம் பெற்றகலம்- இது பச்சைத் தமிழர்கள் மெச்சிடும் புத்தகம். நாட்டின் விடுதலையை- நிலை நாட்டிட ரம்போலா தீட்டிய பாட்டுக்கள் கோட்டைக் கதவுகளாம் புகழ் கொண்ட விருத்தங்கள் சந்தச் சிலம்புகள், ஏட்டில் படுத்திருக்கும்- தமிழ் எண்ணங்கள் பண்பட்ட வண்ணங்க ளாம்! இவை ஊட்டும் உணர்ச்சியினால் தனி ஊக்கம் பிறந்திடும் தூக்கம் பறந்திடும்! ஒற்றை நிலாவெளிச்சம்- பல ஊருக்கும் நாட்டுக்கும் ஓசை உலகுக்கும் முற்றும் பயன்படல்போல் மொழி மூதறி வாளரின் பாடல் பயன்படும். வெற்றி விளைச்சலிது- தமிழ் வித்தை அறிந்தவர் முத்திரை நூலிது. கற்றுத் தெளிந்தவர்கள் தரும் கற்பனைப் பாடல்கள் நெற்பயிர் அல்லவோ? %2C8 பேராசிரியர் ரம்போலா மாஸ்கரான ஸ் அவர்கள் எழுதிய 'ரம்போலா கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1966 ல் வழங்கிய அணிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/96&oldid=924124" இலிருந்து மீள்விக்கப்பட்டது