பக்கம்:துறைமுகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 கவிஞர் சுரதா இருதய வியாதிகளும் சிகிச்சையும் ஆதி இலக்கிய நூல்கள் அவை ஆழ்கடல் நீந்தும் கலன்கள்: நீதி இலக்கிய நூல்கள் அவை நேர்வழி காட்டிடும் கைகள்: சாதி இலக்கிய நூல்கள் அவை சாக்கடை நீரின் புழுக்கள் வீதி இலக்கிய நூல்கள்- சுக வேட்டையில் தோன்றிடும் நோய்கள். மெத்தைக் கதைகளும் பாட்டும் வெறி வேகத்தை அல்லவோ ஊட்டும். வித்தை நுணுக்கங்கள் இல்லா- வெறும் வேடிக்கை நூல்களின் மூலம் டித்தி விளங்குவ துண்டோ -சுரைப் பூவில் நறுமணிம் உண்டோ? சித்தம் தெளிந்திட வேண்டின்- குறை தீர்க்கும் சுவடிகள் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/97&oldid=924125" இலிருந்து மீள்விக்கப்பட்டது