பக்கம்:துறைமுகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 102 சிந்தனைக் கட்டுரை நூல்கள்- பிணி தீர்க்கும் மருத்துவ நூல்கள்: சந்திர மண்டலச் செய்தி மழை சாத்திரம் தத்துவம் தர்க்கம் பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம் -தமிழ்ப் பண்ணியல் மண்ணியல் நுட்பம், யந்திர வித்தை விளக்கம்- இவை யாவும் நமக்கிங்கு வேண்டும். தாயின்றி வாழ்பவ ருண்டு- மறு தாரம் இலாதவ ருண்டு: சேயின்றி வாழ்பவ ருண்டு- பெருஞ் செல்வம் இலாதவ ருண்டு: வாயின்றி ஊமைய ராகிப்- பெரும் வையத்தில் வாழ்பவ ருண்டு; நோயின்றி வாழ்பவ ரில்லை- வரும் நோய்களுக் கும்கணக் கில்லை. நாயை விரட்டிட வேண்டும்- எனில் நம்மிடம் கல்லொன்று போதும். நோயை விரட்டிட வேண்டும்- எனில் நூறு மருந்துகள் வேண்டும். தீய பரம்பரை நோய்கள்- தரும் தீமையை வேரொடு வீழ்த்தும் ஆயுள் மருத்துவத் தொண்டு- செயும் அன்பராம் நம்செல்வ ராசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/98&oldid=924126" இலிருந்து மீள்விக்கப்பட்டது