பக்கம்:துறைமுகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 கவிஞர் சுரதா தஞ்சை நகர்செல்வ ராசன்- சுவை தங்கிய செந்தமிழ் நேசன், கஞ்சி எழுத்தாளர் அல்லர் -வெறும் காதல் எழுத்தாளர் அல்லர் அஞ்சும் எழுத்தாளர் அல்லர்- தமிழ் ஆசை எழுத்தாளர் கண்டீர் செஞ்சொல் எழுத்தவர் பாதை- பிணி தீர்க்கும் மருத்துவ மேதை. கொக்கு விரிக்கும் இறக்கை- நிறம் கொண்ட மலர்பல உண்டு: திக்கில் திரிந்திடும் வண்டு -தொடும் சித்திர நீலங்கள் உண்டு: பக்கம் இருக்கும் மரத்தின்- இலைப் பந்தலில் பொன்மலர் உண்டு: மக்கள் குளிக்கும் குளத்தில் -தமிழ் மங்கலத் தாமரை உண்டு. கரிய நிறக்கடல் போலே- சிலர் கண்விழி வட்டம் இருக்கும். நரியின் தலையினைப் போலே- தமிழ் நாட்டின்வெள வால்தலை கண்டீர் குருதி நிறைந்த இதயம் அது கூம்பிய தாமரை மொட்டாம்! அரிய உறுப்பாம் இதயம் அதை ஆராய்ந்து சொன்னவன் ஹார்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/99&oldid=924127" இலிருந்து மீள்விக்கப்பட்டது