பக்கம்:துளசி மாடம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 101


“உமக்கென்ன ? எஸ்டேட் ஒனர். உங்க சிநேகிதாள்

எல்லாரையும் கூப்பிடுவேள். 'காஸ்மாபாலிடனா' இருக்கும். நான் வைதீகன். எனக்கு ஒத்துக்காது என்னை விட்டுடுங்கோ... ரவியையும் கமலியையும் நீங்க

கூப்பிடறதுதான் முறை, அவாதானே இப்போ ஊர்லேருந்து வந்திருக்கா... வேணும்னா எங்காத்துப் பிரதிநிதிகளாகப் பாருவையும் குமாரையும் அவாகூட அனுப்பி வைக்கிறேன்" என்று பதில் வந்தது சர்மா விடமிருந்து.

ரவி மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவன் எழுந்திருந்ததும் சொல்லி அழைத்து விட்டுப் போகலாம் என்று ரவிக்காகக் காத்திருந்தார் வேணுமாமா.

அப்போது தெருவில் மிராசுதார்களுக்கே உரிய மிடுக்கு நடையும் வலது கையில் வெள்ளிப்பூண் பிடித்த வாக்கிங் ஸ்டிக்கும் வாயில் புகையிலைச் சாறுமாக நாலு விவசாயிகள் பயபக்தியோடு கைகட்டி வாய் புதைத்துப் பின்தொடர நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு கட்டுக் குடுமிக்கார மனிதர். சரிகைக்கரை வேண்டி. மார்பு மறைய போர்த்தியிருந்த மேல் துண்டிலும் சரிகைக்கரை மின்னியது. நெற்றியில் சந்தனப் பொட்டுப் பளபளத்தது. "என்ன ஒய் சர்மா. உம்ம பிள்ளை ஊர்லேருந்து வண்டிருக்கானாமே ?"

புகையிலைச் சாற்றைக் கடைவாயில் ஒதுக்கியதில் பேசும் வார்த்தை குழறியது.

"ஆமாம் ? வாங்கோ சீமாவையர்வாள் !" என்று எழுந்து நின்று வரவேற்றார் சர்மா . ஆனால் வேணுமாமா எழுந்திருக்கவோ, வரவேற்கவோ, முகமன் வார்த்தைகள் கூறவோ செய்யாமல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் வெறுப்பை உமிழ்ந்தது. சர்மா அந்த மனிதரை வரவேற்று எழுந்து மரியாதை செய்ததே வேணுமாமாவுக்கு அப்போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/103&oldid=579819" இலிருந்து மீள்விக்கப்பட்டது