பக்கம்:துளசி மாடம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 துளசி மாடம்


"இல்லே... அவசரமாப் போயிண்டிருக்கேன். அப்படமா வந்து பார்க்கறேன்' என்று வேணுமாமா சர்மாவோடு உடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தே ஒதுங்கினாற்போலத் தம்மைக் கத்தரித்துக் கொண்டு விலகிப் போய் விட்டார் சீமாவையர்.

"அயோக்கியன் ! எந்த வயல் வரப்புச் சண்டைக்கு யாரைத் தூண்டிவிடப் போயிண்டிருக்கானோ ?" என்று. சர்மாவின் காதில் கேட்கும்படியாகவே முணுமுணுத் தார் வேணுமாமா. சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. -

தூக்கத்திலிருந்து ரவி எழுந்திருந்ததும் அவனையும் கமலியையும் இரவு டின்னருக்கு அழைத்துவிட்டு அது சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க வேணுமாமா வோடு வசந்தியும் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

6% တိီ οό இரவு விருந்துக்குப் பத்து இருபது முக்கியமானவர் கள் வந்திருந்தார்கள். கமலி'தான் சென்டர் ஆ. .ப் அட்ராக்ஷனாக இருத்தாள். பெரும்பாலோர் எஸ்டேட் உரிமையாளர்கள்.

கமலிக்கு எதிரே டேபிளில் வந்தமர்ந்திருந்த வேணு, மாமாவின் நண்பர் சாரங்கபாணி நாயுடுவை அவளுக்கு ரவி அறிமுகப்படுத்தி வைத்தவுடன் அவர் பட்டையாக நெற்றியில் அணிந்திருந்த நாமத்தைப் பார்த்து, இவர் வைஷ்ணவராக இருக்கக் கூடும் என்று கருதிக் கொண்டு அஷ்டாட்சர மந்திரம் பற்றியும் இராமநுஜர் பற்றியும் அவரிடம் ஏதோ கேட்டாள் கமலி.

நாயுடுவுக்கு அவளுக்குப் புரியும்படி அதை விளக்கிச் சொல்ல வராததால் பேச்சை மாற்றிப் பாரிஸிலுள்ள "நைட் கிளப்"களைப் பற்றி அவளிடம் விசாரித்தார் அவர்.

அஷ்டாட்சர மந்திரம் பற்றி அறிய ஆவல் காட்டும் பிரெஞ்சு யுவதியிடம் நைட்கிளப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/104&oldid=579820" இலிருந்து மீள்விக்கப்பட்டது