பக்கம்:துளசி மாடம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 103


விசாரிக்கும் தென்னிந்திய நடுத்தரவயது வைஷ்ணவரைப் பார்த்து அந்த முரண்பாட்டைப் புன்னகை பூத்த முகத்தோடு தனக்கு உள்ளேயே இரசித்துக் கொணடிருந் தான் ரவி.

9

பூரீ மடத்தின் சங்கரமங்கலத்து முத்திராதிகாரியான விசுவேசுவர சர்மாவின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளில் ஒன்று மடத்துக்குச் சொந்தமான நிலங்களை யும் தோப்புத் துரவுகளையும் அவ்வப்போது குத்தகைக்கு ஒப்படைப்பது. அன்று மாலை மடத்து நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்திலோ-இயலாவிட்டால் அடுத்த கூட்டத்திலோ அவ்வருடக் குத்தகைகள் முடிவாக வேண்டும். பெரும்பாலும் ஒவ்வோராண்டும் மேற்கே மலையில் சாரல் பிடிக்கக் தொடங்கும்போது அவ்வூரில் குத்தகைகள் எல்லாம் தொகை பேசி முடிவாகி விடுவது வழக்கம்.

தன் பிள்ளை ரவி ஊரிலிருந்து வந்ததில் அன்று மாலை குத்தகைதாரர்களின் கூட்டம் இருப்பது அவருக்கு மறந்து போயிருந்தது.

ரவியும் கமலியும் அவர்களோடு பார்வதியும் குமாரும் வேணுமாமா வீட்டு விருந்துக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன் பூரீ மடம் ஆபீஸ் கிளார்க் வந்து நல்ல வேளையாக அதை ஞாபகப்படுத்திவிட்டுப் போனான். மடத்திலிருந்து அவர் பெயருக்கு அன்று தபாலில் வந்திருந்த நாலைந்து கடிதங்களையும் அப்போது கிளார்க் அவரிடம் கொடுத்திருந்தான்.

அன்று நிலங்களைக் குத்தகைக்கு எடுப்போர் கூட்டம் இருப்பது ஞாபகம் வந்த பின்பே நாலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/105&oldid=579821" இலிருந்து மீள்விக்கப்பட்டது