பக்கம்:துளசி மாடம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி e 10ன்

சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், பூரீ மடத் தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை.

அதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் கூே:மலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மா வின் மேல் சீமாவையர் உள்ளுற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மா விடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார்.

ஒரு யோக்கியன் போனால் போகிறதென்று அயோக்கினைச் சகித்துக் கொள்ளவும் மன்னிக்கவும் கூடத் தயாராக இருப்பான். ஆனால் கடைந்தெடுத்த ஒர் அயோக்கியன் ஒரு போதும் தன்னருகிலுள்ள யோக் கியனைச் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ தயாராக இருக்கமாட்டான். காரணம் யோக்கியதை உள்ளவனை அளவு கோலாகக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் எது அயோக்கித்தனம் என்பதே கண்டு பிடிக்கப் படுகிறது. ஆகவே அயோக்கியத்தனத்தைக் கண்டு பிடிக்க உதவி செய்கிற ஒவ்வொரு யோக்கியனும் அந்த விதத்தில் அயோக்கியர்களுக்கு இடையூறு ஆகிறான். சீமாவை யருக்கு அப்படி ஒர் இடையூறாகச் சங்கர மங்கலத்தில் வாய்த்திருந்தார் விசி வேசுவர சர்மா. யாரையும் எதிரி யாகப் பாவிக்காத சாத்துவீக குணம் இயல்பாகவே இருந்ததால் சர்மா- சீமாவையரிடம் கூட மரியாதை யாகவும், பண்பாகவும் பழகி வந்தார். வேணுமாமா போன்றவர்கள் சிறிதும் தாட்சண்யமில்லாமல் வெறுத்து ஒதுக்கிய சீமாவையர் போன்றவர்களிடமும் சர்மாவால் வித்தியாசமில்லாமல் பழக முடிந்ததென்றால் கல்வி யாலும் ஞானத்தாலும் வெறுப்பும், குரோதமும் என்ன வென்றே அறியாத ஒருவகை மனப்பக்குவம் அவருக்கு வந்திருந்ததுதான் காரணம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/107&oldid=579823" இலிருந்து மீள்விக்கப்பட்டது