பக்கம்:துளசி மாடம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 துளசி மாடம்


மறவன் தாங்கல், நத்தம்பாடி, ஆனந்தக் கோட்டை, அலங்கார சமுத்திரம் ஆகிய சுற்றுப்புறத்து முக்கியமான ஊர்களிலிருந்தும் கூட யாரையும் காணவில்லை.

'வாங்கோ சர்மாவுக்கு அதிக வேலையில்லே. கொஞ்சம் பேர்தான் வந்திருக்கா. குத்தகை சீக்கிரம் முடிஞ்சிடும்" என்று தம்முடைய பினாமிகளே அவ்வளவு நிலத்தையும் மலிவாகக் குத்தகைக்குப் பிடித்து விடலாம் என்ற பகற்கனவுடன் உற்சாகமாக வரவேற்றார் அங்கு அமர்ந்திருந்த சீமாவையர். சர்மாவுக்கு அவருடைய சூது புரிந்தது.

"நீங்க என்னை ரொம்ப rமிக்கணும் சீமாவையர் வாள் பூனிமடத்திலிருந்து எனக்கு வந்திருக்கிற ஆக்ஞை யிலே பதினெட்டு சுற்றுப்புற கிராமத்து ஜனங்களையும் வச்சுண்டுதான் நெலங்களைக் குத்தகைக்கு விடணும்னு ஸ்பஷ்டமா எழுதியிருக்கு."

"அப்போ இ ங் கே வந்திருக்கிற ரெண்டு மூணு கிராமத்து மனுஷாளை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பறது மட்டும் என்ன முறை ?"

"இதிலே மான அவமானம் ஒண்ணும் இருக்கிறதா ானக்குத் தோணலை; பூரீமடத்து உத்தரவை நான் மீறமுடியாது. அதுக்கு நான் கட்டுப்பட்டா கணும்."

"எங்க நாளிலே இதெல்லாம் பார்க்கறதில்லை. நாள் கடத்தாம குத்தகைக்குச் சீக்கிரம் விட்டுடுவோம்."

சர்மா இதற்குப் பதில் சொல்லவில்லை. குமாஸ்தா வைக் கூப்பிட்டு, அடுத்த வாரம் இதே கிழமை இதே இடத்தில் இதே நேரத்தில் பூரீமடம் குத்ககைக்குக் கூட்டம் கண்டிப்பாக நடக்கும் என்று பதினெட்டு கிராமங்களுக்கும் தண்டோராப் போட்டுச் சொல்லி ஏற்பாடு பண்ணிவிடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பி விட்டார் சர்மா.

அவர் திரும்பியபோது காமாட்சியம்மாள் முத்து மீனாட்சிப் பாட்டியிடம் திண்ணையில் அமர்ந்து பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/114&oldid=579830" இலிருந்து மீள்விக்கப்பட்டது