பக்கம்:துளசி மாடம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 துளசி மாடம்


பதினொன்றரை மணிக்குத்தான் அவர்கள் மலைமேல் எஸ்டேட் பங்களாவை அடைய முடிந்தது.

தரை மட்டத்திலிருந்து உயரம் அதிக மாயிருந்ததால் எஸ்டேட் பகுதியில் குளிர் மிகுதியாயிருந்தது. வேணு மாதாவும் வசந்தியும் நாயுடுவின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்கள். அந்தப் பங்களாவைவிட இன்னும் சிறிது உயரமாக மேட்டுப்பாங்கான இடத்தில் தனியே ஒரு கெஸ்ட்ஹவுஸ் இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் போர்ட்டிகோ வரை போவதற்கும் சுற்றி வளைத்துத் தார் ரோடு போடப்பட்டிருந்தது. ஏதோ தேன் நிலவுக்கு வந்தவர்களைத் தனியே கொண்டு போய் விடுவது போல் கமலியையும் ரவியையும் அங்கே கொண்டு. போய் விட்டார் நாயுடு, குளிருக்கு இதமாகப் படுக்கை அறையில் ஹீட்டர் இருந்தது. குளியலறை விளக்கு. களுக்கான ஸ்விட்சுகள் இருக்குமிடம் எல்லாவற்றையும் நாயுடுவே, ரவிக்கு அடையாளம் காண்பித்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பிளாஸ்கில் பாலும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் ஒர் ஆள்.

கமலிக்குத் துர க்க ம் விழித்திருந்ததால் அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். ரவி அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு மெல்ல அவளைக் கேட்ட

"கமலி மத்தியானம் நீ ரெஸ்ட் எடுத்துக்கலை போலிருக்கே... என்ன பண்ணினே ? எப்படிப் பொழுது போச்சு 2 மாடியிலேயும் உன்னைக் காணலியே ?...கீழே: போய் அம்மாட்டப் பேசிட்டிருந்தியா ?"

வசந்தியும் தானுமாகப் போய்க் காமாட்சியம்மா ளிடம் அம்மானையாடச் சொல்லி இரசித்ததையும் ரெக்கார்ட் செய்ததையும் ரவியுடம் விவரித்தாள் கமலி.

"அம்மா உங்கிட்ட எப்படிப் பழகினா? கோப மில்லாமே சுமுகாமா இருந்தாளர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/120&oldid=579836" இலிருந்து மீள்விக்கப்பட்டது