பக்கம்:துளசி மாடம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 துளசி மாடம்


காண்பிக்கவில்லை. யானைகளைப் பற்றிக் கமலி பல கேள்விகள் கேட்டாள். எல்லாக் கேள்விகளுக்கும் வேணுமாமாவும் சாரங்கபாணி நாயுடுவும் மாற்றி மாற்றிப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

'எலிஃபெண்ட் வேலி'யிலிருந்து திரும்பும்போது கமலி நாயுடுவிடம் 'சாண்டல்வுட்'மரம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்றாள். சிறிது தொலைவு சென்றதும் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தி, நன்றாக முற்றிய சந்தன மரம் ஒன்றைக் கமலிக்குக் காட்டினார் நாயுடு. இடுப்பு உயரத்தில் அந்த மரத்தின் முற்றிய கிளை ஒன்று பிரிந்த இடத்தில் யாரோ காட்டு இலாகா ஆட்கள் அரிவாளால் ஒரு சிறு வெட்டு வெட்டி விட்டுப் போயிருந்தார்கள். நாயுடு அந்த வெட்டு வாயில் மூக்கை வைத்து மோந்து பார்த்துவிட்டு, அப்பாடீ வாசனை ஆளைத் தூக்கி அடிக்குது” என்று கூறிவிட்டுக் கமலியையும் அதை மோந்து பகர்க்கும்படி வேண்டினார். -

கமலி தலையைக் குனிந்து அந்த வாசனையை துகள் ந் தாள். வைரம் பாய்ந்த அந்தச் சந்தன மரத்தில் வாசனை கமகமத்தது. இரண்டு மூன்று நாட்களில் அதே வாசனை யுள்ள சந்தனக் கட்டை ஒன்றைக் கீழே கொடுத்து அனுப்புவதாக அவளிடம் நாயுடு கூறினார்.

அங்கிருந்து நேரே எ ஸ் டே ட் பங்களாவுக்குத் திரும்பினார்கள் அவர்கள். ஜீப்பில் ரவியும் கமலியும் பின் வnட்டில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ரவி உற்சாக மாக இருந்தான். மலைக்காற்றின் சுகமான குளிர்ச்சி யும், அருவியில் நீராடிய மதமதப்பும் அவனுடைய உற்சாகத்தைப் பல மடங்காக்கியிருந்தன. அவன் கமலியின் காதருகே மெதுவாகக் கேட்டான். -

'கமலீ ! என்னைப் பொறுத்தவரை நீயே ஒரு சந்தன விருட்சம். உன் உடப்பில் இல்லாத வாசனையா அந்தச் சந்தன மரத்தில் இருக்கிறது ? நான் அநாவசியமாக ஜீப்பிலிருந்து ஏன் கீழே இறங்கவில்லை தெரியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/128&oldid=579844" இலிருந்து மீள்விக்கப்பட்டது