பக்கம்:துளசி மாடம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 127


இளமையும் வாசனையும் கமகமக்கும் ஒரு சந்தன விருட்சம் இங்கே என் அருகிலேயே இருப்பதுதான் காரணம் ! என்ன ? நான் சொல்வது உண்மைதானே ?"

கமலி அவனை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்துக் கனி வோடு புன்முறுவல் பூத்தாள். பங்களாவுக்குத் திரும்பும் போது சாரலும் மேகமூட்டமுமாக வானவில் வேறு போட்டிருந்தது. மலைச் சிகரங்களின் பின்னணியில் வானவில் மிகமிக அழகாயிருந்தது. மலைகளும், சாரலும், பசுமை நறுமணமும், வானவில்லும், அருவி நீராடலும் அவர்களைச் சிறுகுழந்தையின் உற்சாகத்தைக் கொள்ளச் செய்திருந்தன. அருவியிலிருந்து திரும்பியதும் அன்று பகலில் நாயுடு எஸ்டேட் பங்களாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்து சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்ட பின்பே அவர்கள் மலையிலிருந்து கீழே புறப்பட முடிந்தது.

'நீங்க இ ந் தி யா வி .ே ல இருக்கிறவரை எப்ப வேணாலும் இங்கே தாராளமா வந்து தங்கலாம். வித்தி யாசமா நினைக்க வேண்டாம். இதை உங்க சொந்த வீடு மா தி ரி நினைச்சுக்குங்க"-என்று புறப்படும்போது ரவியையும் கமலியையும் பார்த்துச் சொன்னார் நாயுடு. பச்சை ஏலக்காயில் செய்த மாலை ஒன்றைக் கமலிக்கு அவர் அளித்திருந்தார். அந்த மாலை தைத்துக் கோக்கப் பட்டிருந்த விதத்தை அவரிடம் வி ய ந் து புகழ்ந்து கூறினாள் அவள்.

'வீக்-எண்ட்-பிரயாணம்னு வந்தா இதைவிட ஐடியல் பிளேஸ் சங்கரமங்கலத்துக்குப் பக்கத்திலே வேற ஒண்னும் கிடையாது"-என்றார் வேணுமாமா.

"இவா ரெண்டும் பேரும் இங்கே வரபோது ஒரு தடவை நம்ம எஸ்டேட் கஸ்ட்ஹவுஸ் சாவியைக் கூடக் கொடுத்து விடலாம் அப்பா"-என்றாள் வசந்தி,

அவர்கள் அனைவரும் நாயுடுவிடம் விடைபெற்றுக் கொண்டு மலையிலிருந்து கீழே புறப்படும் பொழுது பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/129&oldid=579845" இலிருந்து மீள்விக்கப்பட்டது