பக்கம்:துளசி மாடம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129


படுத்தியிருக்கீங்க தம்பி ! எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"என்றார் இறைமுடிமணி. - メ

அவருடைய கணிரென்ற குரல், தனிப்பட்ட உரையாடலிலும் உணர்ச்சி மயமாகி விடும்போது மேடைப் பிரசங்கம் போலப் பாய்ந்து பாய்ந்து பேசும் அவரது பேச்சு எல்லாவற்றையும் கவனித்த கமலி அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் காண்பித்தாள். ரவி அவளுக்கு விவரித்துச் சொன்னான். அவன் கூறியதை இறைமுடிமணி பணிவோடு மறுத்தார்.

"தம்பி எம்மேலே இருக்கிற பிரியத்தாலே ரொம்ப மிகைப்படுத்திச் சொல்லுது. இந்த ஊர்ல நான் ஒரு சாதாரண விறகுக் கடைக்காரன். அறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஊழியன்."

"உங்கள் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா ?"

"ரொம்ப நாள் உபயோகத் திலே இல்லாமல் மூலையிலே கிடக்கிற செப்புப் பாத்திரத்திலே அது செப்புங்கிறதே மறைஞ்சு போற மாதிரிப் பாசமும் களிம்பும் ஏறிப் படர்ந்து விடறாப் போல இந்த நாட்டிலே அறிவும் உண்மையுமே மறையிர அளவுக்குச் சாதி சமயச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் பெருகிப் போச்சு. அறிவையும் உண்மையையுமே மூடி மறைக்கிற சடங்குகளைத் தகர்க். கணும்கிறது எங்க கொள்கை. பாசமும் களிம்பும் பிடிச்சு நீலம் பாரிச்சுப் போன பாத்திரத்தைப் புளிப்போட்டுத் துலக்கி அதன் அசல் நிறத்தையும், பிரகாசத்தையும் காமிக்கிற மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். õቕLL! மரியாதை இயக்கம் ஆரம்பிச்சதே இதுக்குத்தான். சடங்குகளைவிட உண்மையும் அறிவும் உயர்ந்தவை."

"சுயமரியாதை என்றால்...அதாவது ?"

து-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/131&oldid=579847" இலிருந்து மீள்விக்கப்பட்டது