பக்கம்:துளசி மாடம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 133


அவருக்கு அந்த இடத்தை விடுவதால் மடத்துக்குப் பெரிய லாபம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தது. படித்ததும் இறைமுடிமணி சர்மாவை நோக்கிக் கேட்டார்:

"நம்ம ஒப்பந்தம் கையெழுத்தாறதுக்கு முந்தியே இந்தக் கடிதாசைச் சாப்பு கொண்டாந்து கொடுத்தும் நீ, ஏன் பேசாமல் இருந்தே ?"

“மனுஷனுக்கு வாக்கு நாணயம் வேண்டாமா ? நீதான் முதல்லே அந்த இடத்தைக் கேட்டே, உனக்கு வாக்குக் குடுத்தாச்சு. அப்புறம இன்னொருத்தர் வந்து கூடக் கொஞ்சம் ரூபாய் தரேங்கிறார்னு நான் வார்த்தை மாறலாமா ? உனக்கு விடறேன்னு மடத்துக்கும் எழுதிக் கேட்டுண்டப்புறம் நான் யாருக்கும் எதுக்கும் பயப்பட வேண்டியதில்லே...”

“எப்படியோ தகவல் தெரிஞ்சுக்கிட்டு நல்ல சமயத் திலே குறுக்கே வந்து நுழைஞ்சிருக்காரு மனுசன். சீமாவையருக்கும் அஹமத் அலி சாயபுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் கூட உண்டும்பாங்க...'

"எப்பிடியானா என்ன தேசிகாமணி ! நான் ஏமாறலே. ஏமாற மாட்டேன். தெருமுனையிலே இருக்கிற காலி இடத்திலே பலசரக்குக் ó6km)山ー போட்டால் அக்கிரகாரத்து மனுஷாளுக்கும் மத்தவா ளுக்கும் செளகரியம். பலசரக்குக் கடை அளவு ஜவுளிக் கடை அன்றாடத் தேவைக்குப் பயன்படறதா இருக்கப் போறதில்லே. ஏற்கனவே பஜார்லே பத்து இருபது ஜவுளிக்கடை இருக்கு. அத்தனையிலேயும் பெரிய கடை வந்துட்டுப் போனாரே பாய், அவரோடதுதான். இவ்வளவும் போறாதுன்னு புதுசா இன்னும் தெரு முனையிலே எதுக்கு ஒரு ஜவுளிக்கடை? சிங்கப்பூர் பணம் வெள்ளம் வெள்ளமா வரது. ஊர்ல முக்கால்வாசி வீடு நெலம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிப் போட்டாச்சு. இன்னம் ஆசை தீரலே, எதிலே, எதை லீஸுக்கு எடுக்கலாம் எங்கே கடை போடலாம்னு தே டிஸ்டு அலையறாங்க." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/135&oldid=579851" இலிருந்து மீள்விக்கப்பட்டது