பக்கம்:துளசி மாடம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 துளசி மாடம்


நிஜமாவே கடை போடணும்கிறதை விடப் போட்டிக்கு நின்னு எனக்கு அந்த இடம் கிடைக்க விடாமப் பண்ணிடணும்னு வந்த மாதிரித் தோணு தில்லே... விஷயம் முன்கூட்டியே அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது."

“எனக்கு இப்போ புறப்பட்டுப் போனானே மடத்துக் குமாஸ்தா இவன் மேலேயே சம்சயம் உண்டு ! இவன் சீமாவையருக்கு ரொம்ப வேணுங்கப்பட்டவன் தேசிகாமணி !"

"இருக்கும் யாரோ சொல்லித் தகவல் தெரிஞ்சு தான் சீமாவையரு சாய்புவை இங்கே ஏவிவிட்டு லெட்டர் குடுத்து அனுப்பிச்சிருக்காரு... நம்மைப் போலக் கூட்டாளிகளுக்கு ஒவ்வொரு செலவுக்கும் ரூபாய் ரூபாயாப் பணத்தைக் கஷ்டப்பட்டுத் தேடவேண்டி யிருக்கு. அஹமத்அலி பாயைப்போல நாலு திசையிலே ருந்தும் பணம் லட்சலட்சமாக் குவியறவங்களுக்கு அளவு மீறி அப்பிடிக் குவியற பணத்துக்கு எதைச் செலவு: செய்யலாம், எந்த இடத்தை விலைக்கு வாங்கலாம், எதை. அதிக வாடகைக்குப் பிடிக்கலாம்னு தேடி அலைய வேண்டியிருக்குது..."

"பணம் வெறும் சந்தோஷத்தைத்தான் குடுக்கும். ஒழுக்கமும் யோக்கியதையும்தான் மன நிம்மதியைக் குடுக்கும் தேசிகாமணி பணம் வேணது இருந்தும் ஒழுக்கமும், யோக்கியதையும் இல்லாத காரணத்தாலே எத்தனை பேர் இராத்துக்கமில்லாமத் தவிக்கிறான் தெரியுமா உனக்கு ?"

"அதெல்லாம் தெரிய வேண்டாம்ப்பா நமக்கு ! அயோக்கியனா இருந்து லாபம் சம்பாதிக்கிறதைவிட யோக்கியனா இருந்தே நாம நஷ்டப்படலாம். நமக்கு அதுபோதும்" என்ற இறைமணிக்கு, அஹமத் அலிபாயும் மோவையரும் விஷயத்தை இத்துடன் விட்டுவிடமாட்டார் கள் என்பது தெரிந்துதானிருந்தது. சர்மாவும் அதை உணர்ந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/136&oldid=579852" இலிருந்து மீள்விக்கப்பட்டது