பக்கம்:துளசி மாடம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 137


"நம்ம தம்பியோட வந்திருக்கே பிரெஞ்சுக்காரி, அது தங்கமான பொண்ணாத் தெரியுது. தமிழ் நல்லாப் பேசுதே ? நீ இங்கேருந்து எந்திரிச்சுப் போறவரை உனக்கு முன்னாலே உட்காரவே இல்லேப்பா அந்தப் பொண்ணு 1 உம்மேலே நல்ல மரியாதைப்பா அதுக்கு...

"அது மட்டுமில்லே. நல்ல படிப்புள்ளவள். புத்திசாலி "

"ஒரு பிரெஞ்சுப் பொண்னு இத்தினி அருமையாத் தமிழ் பேசறது அபூர்வமான விஷயம்ப்பா. உனக்கு ஆட்சேபணையில்லாட்டி நான் கூட அவங்களுக்கு நம்ப படிப்பகத்திலே ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணி வர வேற்புக் குடுத்துப் பேசச் சொல்லலாம்னு நினைக்கி றேன். தம்பி ரொம்பக் குடுத்து வச்சிருக்கு. அழகு, அறிவு, இங்கிதம் மூணுமாகச் சேர்ந்து அமையற வாழ்க்கைத் துணை கிடைக்கிறது பெரிய காரியம்."

வாழ்க்கைத் துணையா இல்லையான்னு இனிமேல் தான் முடிவாகனும்..." -சர்மா சிரித்தபடிதான் இதைச் சொன்னார். ஆனால் இறைமுடிமணி விடவில்லை. அப்போதே சாடத் தொடங்கிவிட்டார்.

"ஒருத்தர் தன் துணையைப் பற்றி முடிவு பண்ணிக் கிறத்துக்கு மத்தவங்க யாருப்டா வேணும் ?"

“நடைமுறை உலகத்திலே மத்தவங்க அபிப்பிராய மும் வேண்டியதாக இருக்கே! அப்பா, அம்மா, ஊர், உலகம் எல்லாரையும் எதிர்பார்த்துதானே இங்கே எல்லாம் செய்ய வேண்டியிருக்கு."

"குழந்தைங்க நல்லா மகிழ்ச்சியா இடுக்கட்டும்பா ! சாதி சம்பிரதாயம், குலம் கோத்திரம்னு நீ அவங்க வாழ்க்கையை அழிச்சிடப்படாது..."பார்க்கலாம்... அப்புறம்..." "சரி நான் வரேன்ப்பா. அந்தப் பொண்ணுகிட்ட வும் தம்பி கிட்டவும் சொல்லிடு. அப்புறம் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/139&oldid=579855" இலிருந்து மீள்விக்கப்பட்டது