பக்கம்:துளசி மாடம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 துளசி மாடம்


"சரி பாயோ, நீங்களோ ஒரு லெட்டர் எழுதிக் குடுத்துட்டுப் போங்கோ, அதை அப்படியே மேலே மடத்துக்கு அனுப்பிச்சு அங்கேயிருந்து பதில் வந்ததும் சொல்றேன்..."

"நான் முன்னாலே குடுத்தனுப்பின வெட்டரை அனுப்பினாலே போறும்."

--சர்மா மறுபடியும் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, "சீமாவையர்வாள் : இதிலே தேதி போடலே ; தேதி போட்டுக் குடுத்திட்டுப் போங்கோ-" என்று அவரிடமே திருப்பி நீட்டினார்.

வீட்டுக்குள்ளேயிருந்து யாரோ சந்தியா கால விளக்கு ஏற்றி வரும் ஒளி இடைகழியிலிருந்து படர்ந்தது. சர்மா வீட்டின் இடைகழியைப் பார்த்தார். அவரே எதிர்பாராதபடி கமலி கையில் விளக்கோடு வந்து அதைப் பிறையில் வைத்து விட்டுப் போனாள். ஒரு சுவர்ண தீபம் இன்னொரு வெறுந் தீபத்தோடு வந்து போனதைச் சீமாவையரும், அஹமத் அலியும்கூடப் பார்த்தனர்.

"யாரு ? புதுசா இருக்கே ?" “இங்கே வந்திருக்கா...?" "ஈரோப்பியன் மாதிரியின்னா இருக்கு ?... "ஆமாம் ! எனக்கு நாழியாறது.சந்தியா வந்தனத் துக்குப் போயாகனும், தேதி போட்டுக் குடுங்கோ..."

சீமாவையர் தேதியைப் போட்டுக் கடிதத்தைச் சர்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

“சரி பதில் வந்ததும் நானே சொல்லியனுப்பறேன்,

நமஸ்காரம்"- என்று அவர்களுக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு எழுந்திருந்தார் சர்மா.

சீமரவையரும் அஹமத் அலியும் புறப்பட்

டார்கள். சர்மா உள்ளே சென்றபோது கமலி விளக் குடன் வந்து போனது பற்றியே அவர் சிந்தனை இருந்தது. அந்தக் காட்சி பல சமஸ்கிருதக் காவியங் களைப் படித்துப் படித்து நயம் சேர்ந்திருந்த அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/142&oldid=579858" இலிருந்து மீள்விக்கப்பட்டது