பக்கம்:துளசி மாடம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 துளசி மாடம்


-காமாட்சியம்மாள் போருக்குக் கொடி கட்டு கிறாள் என்பது சர்மாவுக்குப் புரிந்து விட்டது. இது ஒரு பெரிய சண்டையாகி மாடியிலிருக்கும் கமலியின் கவனம் மறுபடியும் கவரப்பட்டு இரசாபாசமாவதை அவர் விரும்பவில்லை.

பேசாமே உள்ளே போய் உன் கைக் காரியத்தைப் பாரு'-என்றார் சர்மா. அவர் அதட்டிய குரலுக்குக் கட்டுப்பட்டுக் காமாட்சியம்மாள் உன்ளே சென்றாள்.

சீக்கிரமோ, அல்லது சிறிது காலந் தாழ்த்தியோ அந்த வீட்டில் ஏற்படக் கூடும் என்று அவர் எதிர் பார்த்த ஒரு பிரச்னை இன்றே இப்பொழுதே விளைந்து விட்டது. விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படாமல் இருக்கும்போதே காமாட்சியம்மாள் சண்டைக்குக் கிளம்பியிருந்தாள். அதட்டியும் மிரட்டியுமே அதிக நாள் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்பது சர்மாவுக்குத் தெரிந்துதான் இருந்தது.

மாமியாரும் மருமகளுமாக இல்லாமலே காமாட்சிக் கும் கமலிக்கும் மாமியார் மருமகள் சண்டையை விடக் கடுமையான் சண்டைகள் வந்துவிடும் போலிருந்தது. இவற்றை எல்லாம் உத்தேசித்துத்தான் ரவியிடம் ஒரளவு விரிவாகப் பேசி விடலாம் என்று ஆற்றங் கரைக்குப் புறப்படும்போது அவனைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்காகத் தேடியிருந்தார் அவர். ரவியின் திட்டம் என்ன? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லாம் அவனிடமே மனம் விட்டுப் பேசிவிடத் தீர்மானித்திருந்தார் அவர்.

அந்த விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கவும் முடியாதபடி நெருக்கடி உருவாகியிருந்தது. ஊர் உலகம் என்று வெளியிலிருந்து நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் இன்னும் வந்துவிடவில்லை. என்றா லும் வீட்டுக்குள்ளேயே எதிர்பார்த்த நெருக்கடிகள் இன்று தொடங்கியிருந்தன. சீமாவையரின் கேள்வி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/150&oldid=579866" இலிருந்து மீள்விக்கப்பட்டது