பக்கம்:துளசி மாடம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 துளசி மாடம்


இப்போது உள்ளுறத் தயங்கிக்கொண்டிருந்தார். அந்த முரண்டுகளால்கூடக் கமலி பாதிக்கப்பட மாட்டாள்

என்று இப்போது அவருக்குத் தோன்றியது

விளக்கு ஏற்றி வைத்த சம்பவத்தால் காமாட்சி யம்மாள் பார்வதியிடம் பேசுவதுபோல் தன்னைக் குத்திக் காட்டிப் பேசியதைக் கமலி எங்கே மனத்தில்

வைத்திருந்து ரவியிடம் சொல்லிக் கலகம் மூட்டி விடுவாளோ என்று எண்ணியிருந்த சர்மாவுக்கு அவளது அடக்கம் முற்றிலும் புதுமையாயிருந்தது. காமாட்சி யம்மாளின் பேச்சை ஒரு பெரிய தவறாகவே அவள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு வேறு காரணங்களுக்காகக் காமாட்சியம்மாள் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பும், மரியாதைகளும் இதனால் ஒரு சிறிதும் குறையவில்லை என்பது தெரிந்தது.

கமலியால் பிரச்னைகள் எதுவும் வராது என்று தெரிந்தாலும்-காமாட்சியம்மாளாலும் ஊராராலும் விரோதிகளாலும் இது சம்பந்தமாகச் சில பிரச்னைகள் எழக்கூடும் என்ற பயம் இன்னும் அவர் மனத்தில்

இருக்கவே செய்தது.

மாடியிலிருந்து ரவி கீழே இறங்கி வந்தான். மறுபடி யும் அப்பாவும் பிள்ளையும் கிணற்றடிக்குப் டோக வில்லை. கமலியைப் பற்றி மேலே விவாதிக்கவும் இல்லை.

மறுநாள் வேணுமாமாவிடம் கார் இரவல் வாங்கிக் கொண்டு ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்குப் போய் ஒரு வாரம் சுற்றிப் பார்க்கும் உத்தேசத்துடன் புறப்பட்டிருந்தார்கள். .

உதவிக்கும் துணைக்குமாகக் கிளீனர் மாதிரி யாராவது ஒரு வேலைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு போகுமாறு அப்பாவும், வேனுமாமாவும் எவ்வளவோ கூறியும் ரவி கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/164&oldid=579880" இலிருந்து மீள்விக்கப்பட்டது