பக்கம்:துளசி மாடம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 183


தார்கள் : நெருப்புப் பற்றும் போதும் யாரும் அதைப் பார்க்க நேரவில்லை.

எல்லாரும் நன்றாக அயர்த்து தூங்கிக் கொண்டிருந்த நேரம். பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி கொல்லைப் பக்கம் எழுந்திருந்து போனவள்தான் முதலில் தீ எரிவதைப் பார்த்துவிட்டுக் கூப்பாடு போட்டாள் ; பாட்டி பார்த்ததே சிறிது தாமதமாகத் தான். அதற்குள் காற்று வாக்கில் அது மாட்டுத் தொழுவத்திற்கும் பரவி விட்டது. மாடியிலிருந்த ரவியும், கமலியும், கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்வதியும், குமாரும் எழுந்து போவதற்குள் அக்கம் பக்கத்தார் ஓடிவந்து கிணற்றிலிருந்து தண்ணிர் இறைத்துத் தீயை அணைக்கத் தொடங்கியிருந்தார்கள். காற்று வேறு இருந்ததால் தீ சுலபத்தில் அணைவதாக இல்லை மாட்டுத் தொழுவம் மேற்கூரை இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி விட்டதன் காரணமாகக் கட்டாமல் விடப்பட்டிருந்த இரண்டொரு கன் று க் குட்டிகளைத் தவிர மற்றவை உள்ளேயே தீயிலிருந்து வெளியேற முடியாமல் தீனமாகக் கதறிக் கொண்டி ருந்தன. பெரிய வைக்கோற் படைப்பாகையினால் அனல் வீட்டு முற்றம் வரை தகித்தது. வீட்டுக் கொல்லைப்புற நிலைப் படிக்கும் முற்றத்துக்கும் நடுவிலிருந்த துளசிச் செடியின் ஒரு பகுதி வாடிக் கருகி விட்டது. மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்க வாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும்.

பத்துப் பன்னிரண்டு பேர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கவும், வாளியில் வாங்கி எரியும் தீப்பிழம்புகளில் வாரி இறைக்கவுமாக இடைவிடாமல் ஒடியாடி முயன்றும் மேல் காற்றின் காரணமாகத் தீயும் முழு மூச்சுடன் மனிதர்களை எதிர்த்துப் போராடியது. மாட்டுக் கொட்டத் தீயை அனைத்து எரிந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/185&oldid=579901" இலிருந்து மீள்விக்கப்பட்டது