பக்கம்:துளசி மாடம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 துளசி மாடம்


போதே விழுந்துவிட்ட கனமான கூரையை அகற்றி மாடுகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ரவியும் அக்கம் பக்கத்தாரும் ஆண்மட்டும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் மாட்டுக் கொட்டத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி பயனளிக்காமல் வைக்கோற். படைப்புத் தீயோ, மாட்டுத் தொழுவத் தீயோ அக்கம் பக்கத்து வீட்டுக்குப் பரவி விடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அடுத்தடுத்து எல்லா வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் வைக்கோற். படைப்புக்களும், கூரைச் சார்ப்பு இறக்கிய மாட்டுக் கொட்டங்களும் இருந்தன. பயத்துக்கு அதுதான் காரணம்.

அதிகாலை ஐந்து மணிக்கு அக்ரகாரத்திலிருந்து போனவர்கள் யாரோ தகவல் சொல்லி இறைமுடிமணி பத்துப் பன்னிரண்டு ஆட்களுடன் ஓடிவந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் அவரும் அவரோடு வந்தவர் களும் சேர்ந்து கொண்டனர்.

பலபலவென்று வி டி கி ற நேரத்துக்குத்தான் தீ கொஞ்சம் அடங்கிக் கட்டுப்பட்டது. தரையோடு ஒட்டி யிருந்த கீழ்பபகுதியைத் தவிர வைக்கோற் படைப்புப் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. காமாட்சி யம்மாள் கோபூஜை செய்து வந்த பசுமாடு உள்பட மூன்று மாடுகள் தீயில் சிக்கி இறந்து விட்டன. அதில் ஒன்று சினைமாடு. . .

அப்பாவும், அம்மாவும், ஊரில் இல்லாதபோது இப்படி நடந்து விட்டதில் ரவிக்கு வருத்தம்தான். ஆனால் இது தானாக நேர்ந்ததில்லை. திட்டமிடப் பட்டுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு சிறிதும் சந்தேகமில்லை. வந்திருந்தவர் களில் வேணுமாமா உள்பட அத்தனை பேரும், 'ஏதோ தம்ம போறாத காலம். எந்தத் தெய்வத்துக்கு எது பொறுக்கலையோ-என்றுதான் சொன்னார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/186&oldid=579902" இலிருந்து மீள்விக்கப்பட்டது