பக்கம்:துளசி மாடம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 துளசி மாடம்


'இவளை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னா இப்போ? பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலேருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணனும்? அதனாலேதான் ஆத்துலே இப்படி அசம்பாவித மெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ண லாம்னு ஆ யி டு த் து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜாபலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ணை வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? வரட்டும்...இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன் கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன? நேக்கொண்னும் பய மில்லே..."என்று பார்வதியிடம் இரைந்து கூப்பாடு போட்டாள் காமாட்சி அம்மாள். .

"கமலி காலங்கார்த்தாலே ஸ்நானம் பண்ணிட்டுப் பக்தி சிரத்தையோட மடிசார் வச்சு நீ புடவை கட்டிப்பியே அதுமாதிரிக் கட்டிண்டு அக்கறையோடு தான் எல்லாம் பண்ணினாம்மா" என்று அம்மா மனசு புரியாமல் கமலிக்காகப் பரிந்து கொண்டு பேசினாள் பார்வதி. .

"வாயை மூடுடி போதும். உன் சர்டிபிகேட்டை இங்கே யாரும் கேழ்க்கலே..."என்று பெண்ணிட, கோபமாகச் சீறி எரிந்து விழுந்தாள் காமாட்சி அம்மாள்.

அம்மாவின் கோபத்தையோ ஆத்திரத்தையோ பார்வதியாலேயே ஏற்க முடியவில்லை. அம்மா கமலியின் மேல் ஒரு காரணமும் இல்லாமல் அநாவசியமாகப் கோபப்படுகிறாள் என்றே பார்வதிக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/190&oldid=579906" இலிருந்து மீள்விக்கப்பட்டது