பக்கம்:துளசி மாடம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 துளசி மாடம்


வெளியேத்தணும்னு புகார் பண்ணியிருக்கா. நான் வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சிண்டு அவளுக்கு முடடை மாமிசம்லாம் சமைச்சுப் போடறேனாம். நாஸ்திகனை மடத்துமனையிலே வாடகைக்கு வச்சு அக்கிரஹாரத்து மனுஷாளுக்குத் தர்ம சங்கடங்களை உண்டு பண்ணியிருக்கிறேனாம். எல்லாம் அந்தச் சீமா வையர் வேலை. பூரீமடத்து நிலங்களையும் மனையையும் அவர் சொன்னபடி அவர் சொன்ன மனுசாளுக்கு விடலேங்கற எரிச்சல்லே இத்தனையையும் அவர் பண்ணியிருக்கார். நல்ல வேளையா பூரீமடம் ஹெட்ஆபீஸ் மானேஜர் இதையொண்ணும் நம்பலை. ஆசார்யாளுக் கும் என்மேலே இருக்கிற அன்பும், அபிமானமும் கொஞ்சம்கூடக் குறையலே. நான் ஆசார்யாளைப் பார்க்கப் போயிருந்தப்போ யாரோ அர்ஜெண்டீனாவி லேருந்து ஒரு லேடி நம்ம கமலி மாதிரின்னு வச்சுக்கோ யேன்...ருக்வேதத்தைப் பத்திப் பெரியவா கிட்டப் பேசிண்டிருந்தா,

'மனச்சாட்சிக்குத் துரோகம் பண்ணாமே நியாயமா கவும் அந்தரங்க சுத்தியோடவும் பூர்மடத்துக் காரியங் களை அவ்விடத்து ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டுப் பண்ணிண் டிருக்கேன். என்மேலே துளி சந்தேகமிருந்தாலும் உடனே நான் இதை விட்டுடறதுக்கும் தயாராயிருக்கேன். பூர்மடம் சம்பந்தப்பட்ட கைங்கரியமாச்சேன்னுதான் இதுக்கு நான் தலைக் குடுத்துண்டு இருக்கேனே தவிர லாபம் பார்த்தோ பிரயாசைக்குப் பலன் எதிர் பார்த்தோ இதை நான் ஒத்துக்கல்லே'- என்று தீர்மானமா நான் எடுத்துச் சொன்னப்புறம்தான் நிர்வாகஸ்தருக்கும் ஆசார்யாளுக்கும் நிஜம் புரிஞ்சுது.

'உம்மமேலே பூர்ண நம்பிக்கையும் விசவாசமும் இருக்கு. நீரே தொடர்ந்து பூரீமடத்துக் காரியங்களைக் கவனிக்கனும்கிறதுதான் இவ்விடத்து ஆக்ஞை. ஏதோ இத்தனை பேர் எழு தியிருக்காளேன்னு கூப்பிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/194&oldid=579910" இலிருந்து மீள்விக்கப்பட்டது