பக்கம்:துளசி மாடம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 193


விசாரிச்சதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்'னா. அப்புறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. காமுவோட ஆசார்யாளைத் தரிசிக்கப் போனபோது நான் இந்த விஷயமெல்லாம் பேசலை. மறுபடி தனியாப் போய்ப் பேசினேனாக்கும், அதுனாலே உங்கம்மாவுக்குக்கூட இதெல்லாம் ஒண்னும் தெரியாது. தெரிஞ்சா வேற வெனையே வேண்டாம். ஏற்கனவே கமலியைக் கரிச்சுக் கொட்டறவளுக்கு இன்னும் வேகம் வந்துடும்...”

இதைக் கேட்ட பின்புதான் ரவிக்கு ஒர் உண்மை புரிந்தது. தான் கமலியோடு வந்து தங்கியிருப்பதால் வீட்டுக்கும் அப்பாவுக்கும் புதிதாகத் தோன்றியிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக அவன் உணர முடிந்தது. "ஏன்தான் இப்படி வீண் வம்பளப்பிலே சந்தோஷப் படறாளோ? நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா, வெஜிடேரிய னிலம் ஒரு பெரிய கல்ட் ஆக அங்கே வளர்ந்துண் டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு ஹெல்த் ஃபுட்ஸ்’னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது! நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வெஜிடேரியனிஸம்"கிற குழப்ப மில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன்தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ?" என்றான் ரவி. - 'தப்பா நினைச்சுக்காதே. விஷயங்கள் உனக்குத்.

தெரிஞ்சிருக்கட்டும்னுதான் சொன்னேன். இதெல்லாம் பார்த்து நான் அசந்துடலே ரவி! ரொம்பத் தெளிவா யிருக்கேன். கமலியை உன்னைவிட நான் நன்னாப் புரிஞ், சிண்டிருக்கேன். முந்தாநாள் எங்கிட்ட ஸான்ஸ்கிரிட் ப டி க் கி ற ப் போ, வாகர்த்தாவிவ'ங்கிற ரகுவம்ச

து-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/195&oldid=579911" இலிருந்து மீள்விக்கப்பட்டது