பக்கம்:துளசி மாடம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 துளசி மாடம்


ஸ்லோகத்தையும் ஜோதி ஸ்வரூபமாகிய சூரியனுக்குச் சிறிய தீபத்தினால் ஆரத்தி காட்டுகிறமாதிரியும், சந்திர காந்தக்கல்லானது மிகப்பெரிய சந்திரனுக்கே அர்க்கிய தீர்த்தம் விடுகிற மாதிரியும், சமுத்திரத்திற்கு அதன் நீரிலேயே ஒரு பகுதியை எடுத்து நீராட்டித் திருப்திப் படுத்துகிற மாதிரியும், நீ அளித்த சொற்களாலேயே உன்னை வழிபடுகிறேன்'- என்று செளந்தரிய லஹரியின் நிறைவில் ஆதிசங்கரர் கூறும் கருத்தையும் நவீன மொழியியல் ஆராய்ச்சியோடு சம்பந்தப்படுத்திக் கமலி விளக்கினாள். அதைக் கேட்டு நான் ஆச்சர்யப்பட்டுப் போயிட்டேன். நான் அவளுக்குச் சொல்விக் குடுத்துண் டிருக்கேனா, அல்லது அவள் எனக்குச் சொல்லிக் குடுத்திண்டிருக்காளான்னே சந்தேகமாயிடுத்துடா ரவி,

“உலகமொழிகள் அனைத்தும் ஒர் அடிப்படையி லானவை என்பதை விளக்கற சமயத்திலே- சொல்லும் பொருளும் போல (அர்த்த நாரீசுவரனாக) இணைந் திருக்கிற உலகின் தாயும் தந்தையுமான பார்வதி, பரமேசுவரர்களாகிய உங்களைச் சொல்வினாலும் பொருளாலும் பயனை அடைவதற்காக நான் வணங்கு கிறேன்'- என்கிற ரகுவம்ச ஸ்லோகத்தைச் சொல்லிக் குடுத்தேன் நான். அப்புறம் அவளா அதைப் போல வர ஒவ்வொரு ஸ்லோகத்தையும் இணைச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாப்பா. கம்பேரிட்டில் ஸ்டடி' என்பது வளர்ந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு அறிவுச் சாதனம் ஆகிவிட்டது."

'ரொம்ப ஆழமான சிந்தனைடா அவளுக்கு" இதைக் கேட்டு ரவிக்குப் பெருமையாயிருந்தது. அந்த வார இறுதியில் அப்பாவின் அனுமதியோடு பக்கத்துக் கிராமத்தில் உறவினர் வகையில் நடைபெற்ற வைதிக முறையிலான நான்கு நாள் கல்யாணம் ஒன்றிற்குக் கமலியையும் அழைத்துக் கொண்டு போனான். ரவி. ஹோமம், ஒளபாசனம், காசி யாத்திரை, நலுங்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/196&oldid=579912" இலிருந்து மீள்விக்கப்பட்டது