பக்கம்:துளசி மாடம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197


சிறிது காலம் பொறுத்துத் தன் தந்தையின் மனம் அதை ஏற்கிற பக்குவம் பார்த்து மீண்டும் இதை அவரிடம் தெரிவிப்பதாக ரவி அப்போது அவளுக்கு வாக்களித்தான் அவனது பதில் கமலிக்குத் திருப்தியளித்தது.

வசந்தி பாம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்ற பின் கமலிக்கு மனம் விட்டுப் பழகுகிற சிநேகிதி என்று வேறு யாரும் சங்கரமங்கலத்தில் கிடைக்கவில்லை. காமாட்சி யம்மாளின் வெ றுப்பு க் கு ம் சம்மதமின்மைக்கும் எதிர்ப்புக்கும் இடையே அவளிடமிருந்தே-அவளை மான nக குருவாகக் கொண்டே பலவற்றைக் கற்றுக் கொண்டாள் கமலி. நடுநடுவே அந்த வீட்டில் சில வேதனைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும் அது கமலி வரையில் தெரிந்து அவள் மனம் வருந்தாமல் சர்மாவும் ரவியும் பார்த்துக் கொண்டர்கள்.

இதற்கிடையில் காமாட்சியம்மாளின் பிறந்தகம் இருந்த கிராமத்திலிருந்து அவளுக்குப் பெரியம்மா முறை ஆகவேண்டிய ஒரு வயதான விதவைப் பாட்டி கோவில் திருவிழாவுக்காகச் சங்கரமங்கலம் வந்து சேர்ந்திருந் தாள். சிவன் கோவில் திருவிழாவுக்காக ஒரு வாரமோ, பத்து நாளோ தங்கி விட்டுப் போவது பாட்டியின் உத்தேசமாக இருந்தது. பாட்டி பரம வைதீகம். துணி மணிகள் ஜெபமாலை அடங்கிய கம்பளி மடிசஞ்சியோடு தன் கையாலேயே கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொள் வதற்குத் தேங்காய்க் கமண்டலமும் கயிறும் கூடக் கையோடு கொண்டு வந்திருந்தாள் அந்தப் பாட்டி.

ஒர் இளம் வயசு வெள்ளைக்காரியை அந்த வீட்டில் பார்த்ததும் பாட்டி ஒரு சிறு கலகத்தையே மூட்டிவிட முயன்றாள். -

"இதென்னடீ காமு ! யாரோ வெள்ளைக்காரியை

விட்டிலே தங்க வச்சிண்டிருக்கே? இதெல்லாம் நம்ம குலம் கோத்திரத்துக்கு அடுக்குமோடி ? நான் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/199&oldid=579915" இலிருந்து மீள்விக்கப்பட்டது