பக்கம்:துளசி மாடம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி இ 202

தொனியாலோகம் பற்றியும், தொனிக்கும், வக்ரோக்திக் கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், கமலி சர்மாவிடம் கேட்டுக் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அவள் துணுக்கமாக ஒவ்வொன்றாய்க் கேட்பது பற்றி மகிழ்ந்த 凸FTTLDT,

"சொல்லிக் கொடுக்க ஆளில்லாமே இதெல்லாம் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா மறந்து போக ஆரம் பிச்சாச்சு. நல்ல வேளையா, நீ வந்து கேக்கறதாலே நானும் இதெல்லாம் ஞாபகப்படுத்திக்கறேன். அறிவுக் களஞ்சியமாகவும் கலாசாரச் சுரங்கமாகவும் இருக்கற சமஸ்கிருத மொழிக்கு இப்படி ஒரு நிலை இந்தத் தேசத் திலே ஏற்படும்னு மகான்கள் கூட நினைச்சுப் பார்த் திருக்கமாட்டா அம்மா..."

'பல ஐரோப்பிய மொழிகளின் தாயான லத்தீனுக்கு ஐரோப்பாவில் இன்று என்ன கதி ஏற்பட்டிருக்கிறதோ அது தான் இந்தியாவில் இன்று உங்கள் சமஸ்கிருதத்துக் கும் ஏற்பட்டிருக்கிறது. புராதனமான லத்தீன் மொழி சர்ச்சுக்கள், மத ஸ்தாபனங்கள், வைதீகச் சடங்குகளுக் கான மொழியாக மட்டும் இன்று எஞ்சி நிற்பதுபோல் தான் சமஸ்கிருதமும் உங்கள் நாட்டில் எஞ்சி நிற்கிறது. ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மிகமிகப் பழைமையான சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், மூன்றிலும் சமஸ்கிருதமே மூத்தது என்று பல உலகறிந்த மொழி யியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்."

லத்தீன் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் அவள் ஒப்பிட்டு விளக்கிய விதம் சர்மாவுக்குப் பிடித் திருந்தது. எட்டு, ஒன்பது பத்து என்னும் மூன்று எண் களுக்கான பதங்களும் முதல் பத்து எண்களுக்கான மற்றப் பதங்களும் லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் மூன்றிலும் ஒரே விதமாக இருப்பதையும் சர்மாவுக்கு எழுதிக் காட்டி விளக்கினாள் அவள். அஷ்ட, நவ, தச. என்ற மூன்று பதங்களையும் போலவே ஒலிக்கக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/203&oldid=579919" இலிருந்து மீள்விக்கப்பட்டது