பக்கம்:துளசி மாடம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 துளசி மாடம்


முறையற்ற செயல்களாகப் படுவதாலும் গুণfuwTar காரணமும், சமாதானமும் கூறாத பட் சத்தில் சட்ட ரீதியாக ஏன் அவர்மேல் நடவடிக்கை எடுக்கலாகாது?" -என்று சர்மாவைக் கேட்டது அந்த வக்கீல் நோட்டீஸ்,

'உள்ளூரில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கைக்குரிய கோயில்களில் நுழைந்து கர்ப்பத் கிருஹத்துக்கு மிகச் சமீபம் வரை சென்று தரிசித்துக் கோவிலின் விதிகளையும், ஆகம சுத்தத்தையும் மீறுவ தானது மனிதாபிமானிகளாகிய ஆஸ்திகர்களைப் பாதிப் பதனால் பிற மதத்தைச் சேர்ந்தவளாகிய கமலியின் மேல் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது? -என்று கமலியின் பெயருக்கு வந்திருந்த நோட்டின் அவளைக் கேட்டது.

கமலிக்கு வந்திருந்த நோட்டிலை அப்பா கேட்காமலே அவரிடம் படிப்பதற்கு நீட்டினான் ரவி. அவரும் அதை வாங்கிப் படித்தார். பின்பு இரண்டு கடிதங்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தம் வசமே வைத்துக் கொண்டார்.

磊静。翌

"நீ ஒண்ணும் கவலைப்பட்டு மனசைக் குழப்பிக்க தேம்மா எல்லாம் நான் பார்த்துக்கறேன்"-என்று கமலியை நோக்கிச் சர் மாவே சமாதானமும் சொன்னார்.

೩. வந்திருந்த கடிதத்தில் கோவிலில் ஆகம தியான சுத்தி பண்ணுவதற்கான செலவை அவள் ஏற்க வேண்டும் என்று வேறு மிரட்டியிருந்தது. சீமாவையர் {} 5ನು ஈடுபட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றா லும் அவர் தூண்டிவிட்டுத்தான் இப்படிக் காரியங்கள். நடக்கின்றன என்பதைச் சர்மாவால் வெகு சுலபமாக அதுமானித்துக் கொள்ள முடிந்தது. முன்பு சீமாவையர் மடத்து ஏஜண்டாக இருந்த காலத்தில் அவர் பூர்மடத்து ಕ್ಲಿಕಾ அடைந்திருந்த பினாமி ஆன் ஒருவன் இப்போது நிலங்கள் தனக்கு அடைக்கப்படாத கோபத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/208&oldid=579924" இலிருந்து மீள்விக்கப்பட்டது